நித்தியானந்தாவை மடத்தை விட்டு வெளியேற்றுக- மதுரை ஆதீன மீட்புக் குழு
Subscribe to Oneindia Tamil

மதுரை ஆதீன மீட்புக் குழு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரபல பேச்சாளர், தமிழ் இலக்கியவாதியான நெல்லை கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் இணைந்துள்ளன.
இந்த குழுவின் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சைவ சமயத் துறவிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்,
- மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியானந்தாவை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
- புதிய ஆதீனத்தை தமிழகத்தின் மற்ற ஆதீன மடங்களை கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும்.
- புதிய ஆதீனத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications