ஜெகன்மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரிய ஆந்திர கலால்துறை அமைச்சர் கைது

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் கடப்பா தொகுதி எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் அவரது தீவிர ஆதரவாளரும் ஆந்திர மாநில கலால்துறை அமைச்சருமான எம். வெங்கட்ரமணா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி ஆந்திர மாநில முதல்வராக இருந்த காலத்தில் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது சி.பி.ஐ.யின் வழக்கு. வருமானத்துக்கு அதிகமாக ஜெகன்மோகன் ரெட்டி சொத்து சேர்த்ததற்கு பல ஆந்திர அமைச்சர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்றும் சி.பி.ஐ குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக பல அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில கலால்துறை அமைச்சர் வெங்கட்ரமணா நேற்று சி.பி.ஐ. முன் ஆஜராகி இருந்தார். இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தம்மை கைது செய்யாமல் இருக்க ஜெகன்மோகன் ரெட்டி முன்ஜாமீன் கோரி ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+