பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நரேந்திர மோடி தான்!: எதியூரப்பா

நிருபர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர், தகுதியானவர்.
எனவே, அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இப்போது மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்சியின் மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் அத்வானி ஆகியோருடன் மோடியை ஒப்பிட்டு பேசக் கூடாது.
கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் மாநில பாஜகவில் நிலவி வரும் குழப்பங்களுக்குத் தேசிய செயற்குழு தீர்வு காண முயல வேண்டும் என்றார் எதியூரப்பா.
முன்னதாக தனக்கு பதவி தராததால் மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்த எதியூரப்பா திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், வழக்குகள் நிலுவையில் இருப்பதால் என்னால் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க செல்ல முடியவில்லை. இன்று மும்பை சென்று செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். நான் கட்சியின் தலைவர் நிதின் கட்காரியை பெரிதும் மதிப்பவன் என்றார்.
இரு நாட்களுக்கு முன் கட்காரியை எதியூரப்பா மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது.
முன்னதாக தனது எதிரிகான கட்சியின் முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜோஷியை ஒடுக்காவிட்டால் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார். இதையடுத்து அவர் செயற்குழுவில் இருந்து பாஜக நீக்கியது. இதையடுத்து மோடி திடீரென நேற்று பிற்பகலில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதே போல எதியூரப்பாவும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்கச் செல்கிறார்.
கட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள எதியூரப்பா தன்னை மோடி ஆதரவாளர் போல காட்டி புதிய கோஷ்டியை உருவாக்க முயல்வதாகத் தெரிகிறது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications