சட்டவிரோத சுரங்க அனுமதி : எதியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு
பெங்களூர்: சட்டவிரோத சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் கொடுக்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
எதியூரப்பா முதல்வராக இருந்தபோது சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட சில நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எதியூரப்பாவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனகளை நடத்தினர். அதேநேரத்தில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் எதியூரப்பாவும் அவரது உறவினர்களும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதியூரப்பாவின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி வெங்கட் சுதர்ஷன் வழக்கின் விசாரணையை மே 29- ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications