பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கொல்கத்தாவில் மமதா தலைமையில் போராட்டம்

கடந்த புதன்கிழமையன்று திடீரென பெட்ரோல் லிட்டருக்கு ரூ7.50 விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்து ஓரளவுக்கு நிலைமை சமாளித்தன.
பெட்ரோல் விலை உயர்வை பல மாநில அரசுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
மேலும் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கூட்டணிக் கட்சியாக தமது திரிணாமுல் காங்கிரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இன்று கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு மமதா பானர்ஜி தலைமை தாங்குகிறார்.
இதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அதிர் செளத்ரி, ஏன் மமதா வீதியில் இறங்கிப் போராட வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகி விடவேண்டியதுதானே என்று காட்டமாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications