மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி- செயற்குழுவில் களைகட்டப் போகும் விவாதம்

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு ஆளும் அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களே அதிருப்திக் குரலை எழுப்பியிருக்கின்றனர். இது தொடர்பாக பகிரங்கமாகவும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இப்படியான ஒரு நிலைமை மிகவும் மோசமானது என்கின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள். ஆனால் இது போன்ற விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதும் சரியான போக்கு அல்ல என்கின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கையாண்ட விதத்தையும் காங்கிரஸ் கட்சியினரே விமர்சிக்கவும் தொடங்கியிருக்கின்றனர். வரலாறு காணாத விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களைக் கைகாட்டிவிட்டு பதுங்கிக் கொண்ட விதம் மக்களிடத்தில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது காங்கிரசாரின் அதிருப்தி.
ஆளும் அரசுக்கு எதிராக ஆளும் கட்சியினரே அதிருப்தி அடைந்திருப்பதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இன்றைய காங்கிரஸ் செயற்குழு விவாதித்து முடிவெடுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications