ஜெ.வுடன் புதுக்கோட்டை முத்துக்குமரன் குடும்பத்தினர் திடீர் சந்திப்பு
சென்னை: மறைந்த புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துக்குமரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி மறைந்த எஸ்.பி. முத்துக் குமரனின் மனைவி சுசீலா தனது குடும்பத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி சுசீலா மற்றும் அவரது மகன் எம்.நரேன்குமார், மகள் என்.நர்மதா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதா, கணவரை இழந்துவாடும் சுசீலாவிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்ற இத்தொகுதியை அக்கட்சிக்கு கொடுக்காமல் அதிமுக தானே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications