விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
மும்பை: மும்பையில் கல்லூரி மாணவர் விடிய விடிய மது விருந்தில் கலந்து கொண்டு குடித்து விட்டு, விடியற்காலையில் 19வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வியே இந்தத் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மும்பை, வார்டன் சாலை, ஷவ்தீர்த் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர் 29 வயது த்வனீல் ஷெராப். இவர் ஒரு ஷேர் புரோக்கரின் மகன் ஆவார்.
சம்பவத்தன்று த்வனீல் தனது நண்பர்கள், முன்னாள் காதலி ஆகியோருடன் தனது நண்பருடைய வீடு உள்ள அபார்ட்மென்ட்டின் உச்சியில் அதாவது 19வது மாடியில் விடிய விடிய மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இரவு முழுவதும் விருந்து தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அதிகாலையில், த்வனீல் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் படுகாயமடைந்து அவர் உயிரிழந்தார்.
அவருடன் இருந்தவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸில் த்வனீலின் உடலை ஏற்றினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அபார்ட்மென்ட்டி்ல குடியிருப்போர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது தற்கொலையாகவே தெரிவதாக போலீஸ் தரப்பி்ல கூறப்படுகிறது. காதல் தோல்வி காரணம் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications