மனோன்மணியம் பல்கலை. புத்தகத்தில் ஆண்டாள் பற்றிய சிறுகதை இல்லை: தமிழக அரசு
சென்னை: திருநெல்வெலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்தில் ஆண்டாள் பற்றிய சிறுகதை இடம்பெறவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு தமிழ் பாடத் திட்டத்தில் டி.செல்வராஜ் என்பவரால் எழுதப்பட்டுள்ள நோன்பு என்னும் சிறு கதைத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. இந்த சிறு கதைத் தொகுப்பு 2012 - 2013 -ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகஸ்ட் 2005-ம் வருடம் வெளியிடப்பட்டது. இதில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பற்றி சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதில் ஆண்டாள் குறித்து தவறான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டார்.
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டதில், நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் ஆண்டாள் பற்றிய சிறுகதை இடம் பெறவில்லை என தெரிய வந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி. மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்தில் நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பதிப்பில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்த எவ்வித கதையும் இடம் பெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications