ராமஜெயம் வழக்கு: முக்கிய பிரமுகர்களை விசாரிக்க மீண்டும் உயர் அதிகாரிகள் திருச்சி வருகை

ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கடந்த 27-ந் தேதியன்று ஐஜி மஞ்சுநாத், டிஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி. மகேஸ்வரி ஆகியோர் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். ராமஜெயம் உடல் கிடந்த திருவளர்ச்சோலை பகுதியிலும் ஆய்வு நடத்தினர்.
மேலும் 5 சிபிசிஐடி தனிப்படைகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டு விசாரணைகளை நடத்தி வருகிறது. ராமஜெயத்துக்கு செல்போனில் பேசிய நபர்கள், அவர் வாக்கிங் போனதை நேரில் பார்த்த நபர்கள் என பலரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டதற்கு 16 விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், ரவுடிகள் என பலரது பட்டியலை சிபிசிஐடி தயாரித்துள்ளது. இனி அவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதனால் அந்த பிரமுகர்கள் அனைவருக்குமே தற்போதே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீண்டும் திருச்சிக்கு ஓரிருநாளில் வரக்கூடும் எனத் தெரிகிறது. அப்போது இந்த பிரமுகர்களிடம் விசாரணை தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications