அசாமில் வெள்ளப் பாதித்த பகுதிகளில் இன்று பிரமதர் மன்மோகன், சோனியா ஆய்வு
கவுஹாத்தி: தென்மேற்கு பருவ மழையினால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலசரிவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவிலலை. இந்த நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாதித்த இடங்களை இன்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தென் மேற்கு பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அசாமில் உள்ள 27 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மேலும் சில இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பலரை காணவில்லை.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜோஹத்ஸ் ரோரியா விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை மாநில முதல்வர் தருண் கோகோகை வரவேற்றார்.
அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தருண் கோகோகை ஆகியோர் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள பகுதிகளை பார்வையி்ட்டனர். தனி ஹெலிகாப்டர் மூலம் முஜூலி தீவு, ஜோர்ஹட், சிப்சாகர், லக்ஹிம்பூர் மற்றும் பீமாஜி மாவட்டங்களில் தலைவர்கள் ஆய்வு நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக பிரம்மபுத்திரா மற்றும் கபிலி ஆறுகள் அபாய நிலையை தாண்டி பாய்ந்தோடுவதை பார்வையிட்டனர். அதன்பிறகு கவுஹாத்திக்கு வந்த பிரதமரும், சோனியா காந்தியும், மாநிலத்தில் நடைபெறும் வெள்ள மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆலோசித்தனை நடத்தினர்.
அதன்பிறகு கவுஹாத்தியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் டெல்லிக்கு திரும்பினர்.
அசாமில் உள்ள 2,166 கிராமங்களில் வசிக்கும் சுமார் 19.37 லட்சம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மாநிலத்தின் 16 பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் தேசிய பேரழிவு தடுப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவ வீரர்களை கொண்ட 7 குழுக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications