நித்யானந்தா டிரஸ்டுக்கு ஆப்பு வைக்கும் கலிபோர்னியா நீதிமன்றம்: நெல்லை கண்ணன்
நெல்லை: கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நித்யானந்தா அறக்கட்டளையைச் சேர்ந்த 4 பேரும் குற்றவாளிகள் என கலிபோர்னியா மத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று மதுரை ஆதீன மீட்பு போராட்டக் குழு தலைவர் நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நித்யானந்தா ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதானவர். அவர் மீதான பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவி்க்கப்பட்டார். இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் திருவண்ணாமலையில் தனக்கென அவர் குருபூஜை நடத்தியது, மதுரை பெரிய ஆதீனத்திற்கு இழைத்த துரோகமாகும்.
கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நித்யானந்தா அறக்கட்டளை மீது வழக்கு நடைபெற்று அந்த அறக்கட்டளையில் உள்ள 4 பேரும் குற்றவாளிகள் என கலிபோர்னியா மத்திய நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனையை வரும் 19ம் தேதி அறிவிக்க உள்ளது.
மதுரை ஆதீனத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் முதியவர் ஒருவரை அடித்து உதைத்த காட்சியை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. எங்கோ நடக்கும் மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடும் மனித உரிமை அமைப்புகள் இதனை கண்டிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
மேலும், நித்யானந்தா மீது மதுரை சோலைகண்ணன் கொடுத்த புகார் மீது 20 நாட்கள் கழித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இத்தனை நாட்கள் கழித்து ஆய்வு நடத்தினால் ஆதாரம் எப்படி கிடைக்கும்?
நித்யானந்தா குறித்த அனைத்து தகவல்களையும் அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 12ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மீது ரிட் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications