அமர்நாத் யாத்ரீகர்கள் மரண விவகாரம்: மத்திய , மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு யாத்திரையில் 45 நாட்களில் 105 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய முதல் 17 நாட்களில் 67 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளையே வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமனற நீதிபதிகள் சவுகான் மற்றும் சுவாதந்தர் குமார் ஆகியோர், முறையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்காததே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் யாத்ரீகர்களின் மரணம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசும், மத்திய அரசும், குகை கோவில் வாரியமும் விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத்திய உள்துறை செயலர், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைமைச் செயலர், அமர்நாத் குகை கோவில் வாரிய தலைவர் ஆகியோர் ஒரு வாரத்தில் நீதிமன்றம் முன் ஆஜராகி, யாத்ரீகர்கள் இறப்பு தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications