பன்றிக்காய்ச்சல்: நீலகிரி மாவட்டத்தில் பெண் பலி, 3 குழந்தைகள் உள்பட 4 பேருக்கு சிகி்ச்சை
நீலகிரி: நீலகிரி மாவட்டதில் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ளது போர்தியாடா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் இருமல், தொண்டை வலிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது 3 குழந்தைகளுக்கும் கடும் இருமல், தொண்டை வலி ஏற்பட்டது. அவர்களுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்று இருந்ததையடுத்து அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிறப்பு வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். ஒரு வேளை அவரிடம் இருந்து இவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து போர்தியாடா கிரமாத்திற்கு சென்ற மருத்துவர்கள் குழு பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications