தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை-முதல்வருக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு பணிகளை விரைவாக முடிக்க அரசு காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதையடுத்து அந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவை, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வரும் முதல்வர் ஜெயலலிதா அதற்காக தினமும் ஒரு மக்கள் நலத்திட்டத்தை அறிவித்து வருகிறார்.

தமிழக அரசு ஊழியர்கள் முழுமையாக செயல்பட்டால் தான் எந்த ஒரு திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற முடியும் என்ற காரணத்தால் அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விரைவில் தமிழகத்தை மிகச்சிறந்த மாநிலமாக்கிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+