குஜராத் "சிங்கம்" நரேந்திர மோடி- புகழாரம் சூட்டிய காங்கிரஸ் எம்.பியால் சர்ச்சை
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி "ஒரு சிங்கம்" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. விஜய் தர்தா புகழாரம் சூட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயின் சமூகத்தினர் சார்பில் விருது வழங்கும் விழா குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த விருதுகளை முதல்வர் மோடி வழங்கினார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் காங்கிரஸ் எம்.பியுமான விஜய் தர்தாவுக்கும் மோடி விருது வழங்கினார். அவருடன் சிறந்த சமூக சேவைக்கான விருது பாபா ராம்தேவுக்கும் கொடுக்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட காங்கிரசின் விஜய் தர்தா, நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமைகளைப் பாராட்டியதுடன் அவரை குஜராத்தின் சிங்கம் என்றும் புகழாரம் சூட்டினார்.
விழா மேடையிலேயே விஜய் தர்தாவின் பாராட்டு குறித்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, அவர் என்னைப் பாராட்டிப் பேசியதற்கான விலையை செலுத்த நேரிடும். நிச்சயம் ஊடகங்களில் பெரிய செய்தியாக வெளிவரும். அவரது கட்சி மேலிடம் விளக்க நோட்டீஸ் அனுப்பும் என்றார். நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. புகழ்ந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications