ரூ. 200 கோடி நிலத்தை போலி பட்டா போட்டு விற்றதாக பரிதி இளம்வழுதி மீது புகார்
சென்னை: ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை பரிதி இளம்வழுதி அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துவிட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு புகார் பிரிவில் ஒரு மனு அளித்தார். அதில்,
1985ம் ஆண்டு தமிழக அரசு தர்ம தோப்பு அறக்கட்டளை நிர்வாகத்திற்காக 7 ஏக்கர் 46 சென்ட் நிலத்தை வழங்கியது. இந்த நிலம் போலி பட்டா தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கும் தொடர்பு உள்ளது.
இதுகுறித்து, 01-08-2011 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரூ. 200 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பரிதி இளம்வழுதி அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் மோதலில் உள்ள பரிதி இளம்வழுதி கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications