கிரானைட் குவாரிகளை அரசே நடத்தும்?- முதல்வர் முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாமா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிரானைட் குவாரிகளில் விதிகளை மீறி கற்களை வெட்டி எடுத்த காரணத்தால் 16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சகாயம் ஐ.ஏ.எஸ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 10 நாட்களாக அங்கு நடைபெற்றுவருகிறது. முறைகேடு கண்டறியப்பட்டதை அடுத்து போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். குவாரியை நடத்தி வந்த ஏலதாரர்களின் ஊழியர்கள் 17 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி., கிரானைட்ஸ்சில் சோதனை நடத்தப்பட்டு சில பிரிவு கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன.

மதுரை மட்டுமல்லாது கிருஷ்ணகிரியிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அந்த மாவட்டத்திலும் உள்ள குவாரிகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. தனியார் கொள்ளையை தடுக்க கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம். விஸ்வநாதன் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர்தங்கமணி , கனிமவளத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டததாக தெரிகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+