கடன் தர மறுத்த எஸ்.பி.ஐ. முன்பு காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம்

மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ்(30). காங்கிரஸ் தொண்டர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அவருக்கு அரசு பணி எதுவும் கிடைக்கவில்லை. சுயதொழில் செய்ய நினைத்து சிவகங்கை தாட்கோ நிறுவனத்திடம் தனிநபர் கடன் கோரி விண்ணப்பம் செய்தார். கடந்த 2006ம் ஆண்டு அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பால்பண்ணை அமைக்க ரூ.1,75,000 தேவை என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.25,000 மான்யமாகவும், ரூ.15,000 சங்கர்கணேஷ் முதலீடு செய்ய வேண்டும் என்றும், மீதம் உள்ள ரூ.1,35,000 பாரத ஸ்டேட் வங்கி மூலமாக கடனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு அவருக்கு மான்யமாக ரூ.25,000 மானாமதுரை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அனுப்பபட்டது. கடன் பெற உரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் தாட்கோ நிறுவனம் வங்கிக்கு பரிந்தரை செய்தது. ஆனால் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துவிட்டது. வங்கியில் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பிறகும் கடன் தர நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் கடன் தரவில்லை என்றால் மான்ய தொகையை திருப்பி அனுப்புமாறு தாட்கோ நிறுவனம் வங்கியைக் கேட்டுக் கொண்டது. அதற்கும் வங்கி தரப்பில் பதில் இல்லை.
கடன் கேட்டு வருடக் கணக்கில் அலைந்தும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த சங்கர்கணேஷ் நேற்று பகல் 12 மணியளவில் வங்கி முன்பு காங்கிரஸ் கொடியுடன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications