மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை கைது!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், 6 வயது மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து, புதைத்துவிட்டார். அவரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த சிங்கசமுத்திரம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். கூலித் தொழிலாளியான இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 6 வயதில் ஷத்திகா என்ற மகளும் இருந்தனர்.

ரேவதியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பாஸ்கர், அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் பாஸ்கர் தனது மனைவி ரேவதியுடன், சொந்த ஊரான திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் இதற்கு ரேவதி மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், ரேவதி உடன் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத பாஸ்கர், கடந்த 14ம் தேதி 6 வயது மகளான ஷத்திகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். அதன்பிறகு மகளின் இறந்த உடலை புதைத்துவிட்டார்.

ஆனால் குற்ற உணர்வு தாங்க முடியாமல் தவித்த பாஸ்கர், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதி ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை கைது செய்தனர்.

மேலும் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்திற்கு பாஸ்கர் அழைத்து செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஷத்திகாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+