குடிபோதையில் ரூ.200 கடனுக்காக நண்பனைக் குத்திக் கொன்ற வாலிபர்: மக்கள் மறியல்
நெல்லை: பாளையங்கோட்டை அருகே 200 ரூபாய் கடனுக்காக கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். அவரும் புதுக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் நண்பர்கள். ஆறுமுகத்திடம் முருகேசன் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். நேற்று இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்தியபோது ஆறுமுகம் கடனை திருப்பிக் கேட்டார். முருகேசன் பிறகு தருவதாக கூறியதும் அவர் சமாதானம் அடைந்தார். ஆனால் மீண்டும் முருகேசன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பித் தருமாறு வற்புறுத்தி தகராறு செய்த ஆறுமுகம் திடீரென முருகேசனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முருகேசனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு தெருமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஜெயபாலன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளியை கைது செய்வதாக கூறியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications