மக்கள் சொத்தை கொள்ளையடித்தால் குலநாசம் தான்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
திருவண்ணாமலை: சிவன் சொத்து குலநாசம் என்பதை மறந்து விடக்கூடாது. மக்கள் சொத்தை எடுத்தால் குலநாசம் தான். எனக்கு மக்கள்தான் தெய்வம், அவர்களை நம்பித் தான் தேர்தலில் நின்றேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக சார்பில் ஏழை இந்து குருக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய விஜய்காந்த் கூறுகையில்,

இங்கு இந்து குருக்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவார்கள். கிரிவலம் வருகிறார்கள்.

சிவன் சொத்து குலநாசம் என்பதை மறந்து விடக்கூடாது. மக்கள் சொத்தை எடுத்தால் குலநாசம் தான். எனக்கு மக்கள்தான் தெய்வம், அவர்களை நம்பித் தான் தேர்தலில் நின்றேன்.

தேமுதிக பத்தோடு 11 என்றார்கள். இன்று முதல் கட்சியாக இருக்கிறது. விஜயகாந்த் 32 மாவட்டங்களுக்கும் சென்றதும் அதிமுக செயற் குழுவை கூட்டுகிறார்கள். இன்று மின்சாரம் இல்லை. பால் விலை உயர்வு, மின் கட்டணம உயர்வு, இதனால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லை, அடுத்த சம்பா சாகுபடி காலம் தொடங்கிவிட்டது. அதற்கும் தண்ணீர் இல்லை. நான் பலனை எதிர்பார்க்காமல் கடமை செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு சம்பாதிக்க வேண்டும், வீடுகட்ட வேண்டும் என்று ஆசை இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான பணத்தில் ரூ.65 லட்சம் மோசடி செய்துள்ளனர். வேலூர் பக்கத்திலும் 40 மாணவர்களுக்கு பதில் 60 மாணவர்கள் என்று கணக்கு காட்டி மோசடி செய்துள்ளனர்.

இலங்கை ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டால் இறையாண்மையை காக்க வேண்டும் என்கிறார்கள். இலங்கை நட்பு நாடு என்கிறார்கள். ஆனால் இலங்கை, சீனாவை தனது நட்பு நாடு என்கிறது.

கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கவும், காவிரி நடுவர் மன்றத்தை கூட்டவும் வலியுறுத்தி தலைவர்கள் மட்டும் டெல்லிக்கு செல்லக் கூடாது. தொண்டர்களையும் அழைத்து செல்ல வேண்டும். அதில் டெல்லியே குலுங்க வேண்டும். இந்த விவகாரங்களில் கடிதம் எழுதி பிரயோஜனம் கிடையாது.

காவிரியை வடிகாலாகத் தான் பயன்படுத்துகிறார்கள். காவிரிப் பிரச்சனையில் எம்.ஜி.ஆர். கெளரவம் பார்க்கவில்லை. எனவே கெளரவம் பார்க்காமல் மற்ற மாநில முதல்வர்களுடன் பேச வேண்டும்.

2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும், எனது தொண்டர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள் என்றார் விஜய்காந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+