அரசு மருத்துவமனைகளில் நாய், எலி வேட்டை: 'ஊழல் பெருச்சாளிகள்' சிக்குமா?

Subscribe to Oneindia Tamil

Rat
சென்னை: சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் எலி கடித்து இறந்ததாக எழுந்த புகாரை அரசு மருத்துவமனைகளில் சுற்றித் திரியும் நாய்கள், எலிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இதுவரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிபட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுளிக்க வைக்கும் நாற்றம். எங்கு திரும்பினாலும் கழிவுகள், இலவச சிகிக்சையை பெறுவதற்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. ஏழ்மையும், இல்லாமையும் துரத்த நோய்க்கு சிகிச்சை பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலையில் அரசு மருத்துவமனையை நாடினால் அலட்சியமும், அவமானமும்தான் அங்கு சிகிச்சையாக கிடைக்கிறது. பிரசவத்திற்கு பல்லாயிரம் ரூபாய் கொடுக்க இயலாமல் அரசு தாய்- சேய் மருத்துவமனைகளை நாடினால் அங்கு பச்சிளம் குழந்தைகளை எலிகளுக்கும், நாய்களுக்கும் இரையாக்க வேண்டியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் எலி கடித்து இறந்ததாக எழுந்த புகாரை அரசு மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்கள், எலிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் குறித்து இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளை சுத்தமாக வைத்திருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரிகளில் குட்டி போட்டு குடும்பம் நடத்தி வரும் நாய்- பூனைகள் மற்றும் எலிகளை பிடிக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் இன்று நாய்கள் வேட்டையாடி பிடிக்கப்பட்டன. வார்டுகளில் சுற்றித்திரிந்த நாய்களை புளூ கிராஸ் அமைப்பினர் சுறுக்கு கயிறுகளை பயன்படுத்தி பிடித்தனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிபட்டுள்ளன. அங்கு எலிகளை வேட்டையாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பச்சிளம் குழந்தை இறந்த பின்னர்தான் மருத்துவமனை வளாகத்தில் இருந்த எலிப் பொந்துகள் அடைக்கப்பட்டு வருகின்றன. விஷம் வைத்தும் எலிகள் கொல்லப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் எலிகளை பிடிக்க வலையும் விரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சுற்றித்திரியும், நாய்கள், எலிகளை பிடிப்பதோடு மட்டும் மருத்துவமனை சுத்தமாகிவிடாது அங்கு சுற்றித்திரியும் ஊழல் பெரிச்சாளிகளை பிடித்தால் மட்டுமே ஏழை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும். காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அரசின் பணத்தை கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இரைப்பதை விட அரசு மருத்துவமனைகளை சீர்படுத்தினாலே எல்லோருக்கும் உயிர் காக்கும் உயரிய சிகிச்சை கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+