ரூ. 7,000 கோடி கடனையும் வாங்கிவிட்டு வங்கிகளை மல்லையா படுத்தும் பாடு!

அவருக்குக் கடன் கொடுத்துள்ள பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பு போல அமைத்து, கடனை திரும்ப வசூலிப்பது குறித்து பேச்சு நடத்தி வருகின்றன. இதில் விஜய் மல்லையா அதிகமாக கலந்து கொள்வது இல்லை. அவரது நிறுவன அதிகாரிகளும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுகளும் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இவர்களால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடிவதுமில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இதுவரை எந்த பலனும் வங்கிகளுக்கு இல்லை. நாட்கள் தான் கடந்து வருகின்றன. (இந் நிலையில் வங்கிகளின் இன்றைய கூட்டத்துக்கும் மல்லையா வரவில்லை. அவர் வெளிநாட்டில் பயணத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் இந்தக் கூட்டம் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்)
மல்லையாவின் இந்த ஐடியாவை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்டுவிட்ட வங்கிகள், இப்போது அவரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கூறியுள்ளன.
இப்போதைக்கு மல்லையாவிடம் இருந்து பணத்தைத் திருப்பி வாங்குவது கஷ்டம் என்பதால், இந்தக் கடன்களுக்கு ஈடாக மேலும் சொத்துக்களையும் ஜாமீன்களையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வருகின்றன.
மேலும் இந்த மாத இறுதியில் மல்லையாவே வங்கிகளின் கூட்டத்துக்கு வந்து, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரூ. 7,000 கோடி கடன் தவிர, கிங்பிஷரில் 20 சதவீத பங்குகளிலும் இந்த வங்கிகள் இன்னொரு ரூ. 1,000 கோடியையும் முதலீடு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான் மிக அதிகமாக ரூ. 1,400 கோடியை மல்லையாவுக்கு அள்ளித் தந்ததாகும். பஞ்சாப் நேஷனல் பேக்ங் ரூ. 700 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ. 500 கோடியையும் தந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications