சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 38 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. காலை 11 மணிக்கு கூடிய அவைகள் 11.03 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் 12 மணிக்கு கூடியவுடன் பாஜகவினர் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து முதலில் ராஜ்சயபா நாள் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2 மணிக்கு கூடிய ராஜ்யசபா சில நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications