விழுப்புரம் அருகே தேரோட்டம் நடத்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு புகழ் பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதே போல, இந்த வருட திருவிழா கடந்த மாதம் 6 ம் தேதி ஆடித் திருவிழா தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு அப் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மெயின்ரோடு வழியாக தேர் செல்லக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஒரே கிராமத்திலே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அப்போதைய சப் - கலெக்டர் தேரோட்டத்தை ரத்து செய்ததோடு, தோரோட்டம் நடத்த தடை விதித்தார்.
இதனையடுத்து, தற்போதைய சப் - கலெக்டர் விவேகானந்தன் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை தேரோட்டம் நடத்த எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே, கோயில் தேரோட்டத்தை உடனே நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி அப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கோயில் வளாகம் முன்பு நேற்று முதல் துவங்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications