விலை உயர்வில் இருந்து இந்த முறை பெட்ரோல் மட்டும் 'தப்பியது' எப்படி?!

டீசல், சமையல் எரிவாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வந்தன. இதையடுத்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பெட்ரோல் விலையை இந்த முறை உயர்த்தவில்லை.
பெட்ரோல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.6 இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரிக்கட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை (excise) லிட்டருக்கு ரூ.5.50 குறைத்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல் மீதான கலால் வரி இதுவரை லிட்டருக்கு ரூ.14.78 ஆக இருந்தது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது மத்திய அரசுக்கு ரூ.14.78 கலால் வரி செலுத்தி வந்தன.
இப்போது இந்த வரியை ரூ.5.50 குறைத்துள்ளது மத்திய அரசு. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது மத்திய அரசுக்குச் செலுத்தும் கலால் வரியை ரூ.5.50 குறைத்துக் கட்டலாம்.
இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த 6 ரூபாய் இழப்பில் ரூ. 5.50யை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது போல் ஆகிறது.
இதன்மூலம் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்துள்ளது.
ஆனால், டீசல், கேஸ் விலையை உயர்த்துவது தான் மத்திய அரசுக்கு பெரும் கஷ்டமான விஷயமாகும். பெட்ரோல் விலையை நினைத்தபோதெல்லாம் ஏற்றிவிடுவார்கள்.
இதனால் இந்த முறை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லையே என்று யாரும் சந்தோஷப்பட வேண்டாம். அது எப்போது வேண்டுமானாலும் உயரும்.
டீசல் விலை, சமையல் கேஸ் விலையை உயர்த்திய மத்திய அரசு இந்த முறையும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தவில்லை. நாட்டில் கீழ்மட்டத்தில வசிக்கும் பரம ஏழை மக்கள் பயன்படுத்தும் எரிபொருள் என்பதால் அதன் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால், இந்த மண்ணெண்ணெயை பலரும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிச்சந்தையில் 4 மடங்கு விலைக்கு விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications