சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். 1948-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும், சட்டப் படிப்பும் படித்து 1973-ல் வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பதவி வகிப்பார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்.












Click it and Unblock the Notifications