வேலூரில் மருத்துவ கல்லூரி மாணவி உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு?
வேலூர்: வேலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவ கல்லூரி மாணவி உட்பட 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களிடையே காய்ச்சல் பரவி வருகிறது. ஆம்பூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் வேலூர் சைதாப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பலியானார். இதனால் வேலூரில் தற்போது டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு, டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் உறுதியாக இருப்பதால், அவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனிவார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை வெளிநபர்கள் சந்திக்க அனுமதிக்கபடவில்லை.
இது குறித்து வேலூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது,
வேலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த மாணவி, டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications