அழகிரியின் முதல் மருமகனிடம் 2வது முறையாக விசாரணை-2வது மருமகனுக்கும் சம்மன்
மதுரை: மதுரை கிரானைட் மோசடி தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேஷிடம் மீண்டும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல்வேறு ஆவணங்களை அவரிடமிரு்ந்து போலீஸார் பெற்றுள்ளனர். மேலும் அழகிரியின் 2வது மருமகனையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மீது குவாரி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். அவரைப் பிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.
இதையடுத்து மு.க,அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷை கடந்த 2ஆம் தேதி மதுரைக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர். நேற்று துரை தயாநிதியின் சென்னை வீடுகளில் சோதனை மேற்கொண்டனர் போலீசார். இந்த நிலையில் இன்று மீண்டும் வெங்கடேஷை மதுரைக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர்.
வக்கீல்களுடன் போலீஸ் விசாரணைக்கு வந்த வெங்கடேஷ் பல்வேறு ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆவணங்கள் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் அழகிரியின் 2வது மகள் அஞ்சுகச் செல்வியின் கணவர் விவேக் தொடர்பான ஆவணங்கள் என்று கூறப்படுகிறது. அவரையும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருப்பதால் அவர் அமெரிக்காவில் இருப்பது தொடர்பான ஆவணங்களாக இவை இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் விவேக்கையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்ம்ன் போயுள்ளதாம். விவேக் அமெரிக்காவுக்குப் போய் ஒன்றரை வருடங்களாவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications