''பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் போல உங்களின் சந்தோஷமும் உயரட்டும்....''
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் தடை ஆகியவற்றை வைத்து உலா வரும் எஸ்.எம்.எஸ் கிண்டல்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த இரண்டையும் இணைத்து ஒரு கலக்கல் எஸ்.எம்.எஸ். உலா வர ஆரம்பித்துள்ளது.
தினம் தினம் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை. இப்போது இந்த விலை உயர்வுக்கு சமையல் எரிவாயுவும் இணைந்துள்ளது. மின்சாரத்தை பார்ப்பதோ கடவுளைப் பார்ப்பது போல இருக்கிறது. எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத நிலையில் இருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு புதுவித எஸ்.எம்.எஸ் ஒன்று தற்போது கலக்கி வருகிறது.
"பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் போல தினம் தினம் உங்களின் சந்தோசம் உயரட்டும். உங்களின் துன்பங்கள் யாவும்ம் தமிழ்நாட்டு மின்சாரம் போல இல்லாமல் போகட்டும்" என்பதுதான் அந்த எஸ்.எம்.எஸ். செய்தி.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அடிக்கடி உயர்கிறது. இதனால் நடுத்தர மக்களும், ஏழைகளும்தான் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த விலை உயர்வைப் போல சந்தோசம் உயரட்டும் என்கின்றனர் குறும்பு எஸ்.எம்.எஸ் அனுப்பியர்கள்.
அதேபோல் தமிழ்நாடு மட்டுமல்லாது வடமாநிலங்களிலும் இன்றைக்கு மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சென்னைத் தவிர தமிழ்நாடு முழுவதும் 14 மணிநேரம் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. சில நாட்களில் இரவு நேரங்களில் மின்சாரம் முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.இதனை துன்பத்தோடு ஒப்பிட்டுள்ள குறும்பர்கள் துன்பங்கள் யாரும் மின்சாரம் போல் இல்லாமல் போகட்டும் என்று கூறியுள்ளனர்.
'ஜெனரேட்டர்' வைத்த ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க நம்ம மக்கள்?












Click it and Unblock the Notifications