மீண்டும் பேஸ்புக், டுவிட்டரில் தீவிரமான கருணாநிதி

கடந்தசில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ‘கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் துவங்கப்பட்டது. பேஸ்புக் துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்து புதிய சாதனை படைத்தனர். மேலும், சுமார், 10,000 பேர் வரை அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர்.
கருணாநிதியின், பேஸ் புக் பக்கத்தில் டெசோ மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.
இதற்கு, அந்த பேஸ்புக்கில் கடுமையான எதிர்ப்புக் கருத்துக்கள், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது போன்ற பதிவுகளுக்கு, திமுகவினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இறுதியில் ‘கலைஞர் கருணாநிதி' பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு சில நாட்களாக மீண்டும் பேஸ்புக் மற்றும் டூவிட்டர் பக்கம் ஆர்வமாக கேட்டறிந்து பார்த்து ரசித்து வருகின்றாராம்.இதன் முதல் கட்டமாக திமுக தலைவர் கருணாநிதி லேப்டாப்பில் பேஸ்புக் பார்ப்பது போல ஒரு படம் வெளிவந்துள்ளது. அதை பார்த்து விட்டு அருமையா இருக்குய்யா என உற்சாக குரல் கொடுத்தாராம்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தனது அரசியல் ஆயுதமாக பேஸ்புக் மற்றும் டூவிட்டரையே தேர்வு செய்து உள்ளராம். இதை தெரிந்து கொண்டு திமுக முன்னணி தலைவர்களும், மாவட்ட கட்சி நிர்வாகிகளும் தாங்களும் ஒரு பேஸ்புக் கணக்கை துவக்கிவைத்து காத்துள்ளார்களாம்.
மேலும், ஈழ விவகாரத்தில் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை இந்த
பேஸ்புக் மூலம் உலகத் தமிழர் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளாராம்.
கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்
http://www.facebook.com/Kalaignar89
கருணாநிதியின் டிவிட்டர் பக்கம்
@Kalaignar 89
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications