வரதட்சனை கொடுமை: பச்சிளம் குழந்தையுடன் மனைவிக்கு தீ வைத்த கணவன்
டெல்லி: டெல்லியில் அதிக வரதட்சணைக்காகவும் ஆண்குழந்தை வேண்டும் என்பதற்காகவும் கணவன் குடும்பத்தினரே இளம்பெண்ணை கைக்குழந்தையுடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரவர்திகா குப்தா வயது 25. பி டெக் பட்டதாரியான இவருக்கும் டெல்லியைச் சேர்ந்த அஸ்சுதோஸ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டெல்லி சரோஜினி நகர் பகுதியில் கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு 13 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கணவனும் அவருடை மாமியார், மாமனார் உள்ளிட்டோர் வரதட்சனை அதிகம் கேட்டு பிரவர்திகாவை கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. மேலும் குடும்பத்தின் முதல் வாரிசாக ஆண்குழந்தைதான் வேண்டும் என்றும் கணவரின் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி பிரவர்த்திகாவை குழந்தையுடன் சேர்த்து தீவைத்துள்ளனர். இதில் பிரவர்த்திகா படுகாயமடைந்தார். குழந்தைக்கு 55 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் பிரவர்திகா அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பிரவர்திகா மரணமடைந்தார். இதனையடுத்து சரோஜினி நகர் போலீசார் கணவர், மாமனார், மாமியார் மீதும் வரதட்சணை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமியார் சுஷ்மாவை கைது செய்த போலீசார் தலைமறைவான கணவரை தேடிவருகின்றனர்.
நாடுமுழுவதும் வரதட்சனை கொடுமையாலும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களினாலும் 8,000 பெண்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் பச்சிளம் குழந்தையுடன் பட்டதாரிப்பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications