டெங்கு காய்ச்சல் மருந்துக்களை கடைகளில் விற்க தடை!
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு டாக்டர்கள் உதவியை மட்டுமே நாட வேண்டும். மாறாக மருந்து கடைகளில் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக் கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் மருந்துக்களை மருந்து கடைகளில் விற்பனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை கண்டு பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
டெங்கு காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்ய கூடாது. அதேபோல பொது மக்களும் டெங்கு காய்ச்சலுக்கு டாக்டர்கள் உதவியை மட்டுமே நாட வேண்டும். மாறாக மருந்து கடைகளில் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications