கரையை கடக்கும் நிலம் புயலில் 'போட்டோ' எடுக்க வந்த மக்கள்-தடுத்து நிறுத்திய போலீசார்

நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.
இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நனைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.
நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications