விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல்

சட்டசபையில் நேற்று நடந்த கூட்டத்தின்போது, தேமுதிக உறுப்பினர்கள், விஜயகாந்த் குறித்துப் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் பேசுகையில், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று விஜயகாந்தைப் பாராட்டினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று கூறுகிறார். இப்போது முன் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளார். அவரா அஞ்சாதவர்? என்றார்.
இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டென்று எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் கூறினார். நீங்கள் ஏன் முழி என்றதும் காதைத் தொட்டுப் பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை என்றார். ஆனாலும் தேமுதிகவினர் விடாமல் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வைத்திலிங்கம், தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். உங்கள் தலைவர்தான் எப்போதும் நிதானம் இல்லாமல் பேசுகின்றார் என்றார். அதற்கும் தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேமுதிக உறுப்பினர் பாண்டியராஜன் குறுக்கிட்டு, அமைச்சர் கூறிய நிதானம் என்ற வார்த்தையை பேரவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்டு வேகமாக எழுந்த அமைச்சர் பா.வளர்மதி, நிதானம் என்ற சொல் அவையில் பயன்படுத்தக்கூடாத சொல் இல்லை. எந்தத் தலைவர் நிதானமாக இருக்கிறார். எந்தத் தலைவர் நிதானமாக இல்லை என்பதை மக்கள் அறிவர். மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அந்தத் தலைவர் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் குறுக்கிட்டு, யாரும் பேரவைத் தலைவர் அனுமதியின்றி பேசக்கூடாது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தேமுதிக உறுப்பினர்கள் அவர்களாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதனை அனுமதிக்கக்கூடாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications