'சிட்டிசன் அத்திப்பட்டி' பாணியில்: உ.பி. அரசு ஆவணத்தில் காணாமல் போன கிராமம், 3,600 பேர்!!
லக்னோ: உத்தர பிரதேச மாநில அரசு ஆவணங்களில் அம்மாநிலத்தில் உள்ள செம்ராவுல் என்ற கிராமத்தின் பெயரையேக் காணவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் உள்ளது செம்ராவுல் கிராமம். அந்த கிராமத்தில் 3,600 பேர் வசிக்கின்றனர். ஆனால் அரசு ஆவணங்களில் அக்கிராமத்தின் பெயரே இல்லை. அந்த கிராமத்தில் 1,900 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்செக்ஸ் கணக்கெடுப்பின்படி செம்ராவுலில் யாருமே வசிக்கவில்லை என்று பதிவாகியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 3 பஞ்சாயத்து தேர்தல்கள், 2 லோக்சபா தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஆகியவை நடந்துள்ளன.
செம்ராவுலில் வறுமை கோட்டுக்கீழ் உள்ளவர்களுக்கான அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 116. அங்கு ஒரு துவக்கப் பள்ளி உள்ளது. அதிகாரப்பூர்வமாக அங்கு யாரும் வசிக்காததால் செம்ராவுலில் நடுநிலைப் பள்ளி இல்லை.
இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் செம்ராவுல் கிராம பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்ற சபாஜித் சிங் குஸ்வாஹா பதவியேற்ற கையோடு இந்த பிரச்சனைகள் குறித்து அப்போதைய வருவாய் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அப்படியும் நிலைமை மாறியபாடில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications