சப்பாத்தி கேட்டு சுவர் மீது ஏறி நின்று கைதிகள் தற்கொலை மிரட்டல்: சேலம் சிறையில் பரபரப்பு
சேலம்: சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்கு சப்பாத்தி வழங்க வேண்டும் என்று கூறி சுவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 7 பேர் நேற்று இரவு சமையலறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்களை பயன்படுத்தி சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கம் வந்த ஜெயிலர், சமையலறையில் சிலர் சப்பாத்தி சுடுவதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.
இந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்ட அவர் அவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் சப்பாத்தி சாப்பிட முடியவில்லையே என்று அந்த 7 கைதிகளும் வருந்தினர். இதையடுத்து இன்று காலை அவர்கள் சிறையின் மதில் சுவர் மீது ஏறி நின்று தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தருமாறு கூறினர். இல்லை என்றால் சுவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டினர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications