போலீசாரை தாக்கிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வாரண்ட் கைதி
நெல்லை: நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து போலீசார் இருவரை தாக்கிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வாராண்ட் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசாமி கடந்த 2009ம் ஆண்டு அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி நாங்குநேரி அருகே உள்ள வருகால்கு்றிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பிச்சாண்டி, மேலநத்தத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், இசக்கிதுரை, பாபு, நம்பிராஜன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளி வந்தனர்.
இவ்வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது பிச்சாண்டி தவிர மற்றவர்கள் ஆஜராகி வந்தனர். இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மேலப்பாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மேலப்பாளையம் எஸ்.ஐ. பலவேசம் தலைமையிலான போலீசார் பிச்சாண்டியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்.ஐ. பலவேசம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த பிச்சாண்டியை வழிமறித்தனர். ஆனால் அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார்.
உடனே அவரை போலீசார் வாகனத்தில் துரத்திச் சென்றனர். இதற்கிடையே அவரை மடக்கிப் பிடிக்குமாறு மைக்கில் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே பைக்கில் வேகமாக வந்த பிச்சாண்டியை இரண்டு போக்குவரத்து போலீசார் வழி மறித்தனர். ஆனால் அவர் அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். உடனே அங்கிருந்த ஹைவே பாட்ரோல் போலீசார் பிச்சாண்டியை துரத்திச் சென்றனர். ஆனால் அவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு வழியாக தப்பிச் சென்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications