எம்.ஜி.ஆர். சமாதியை ஜெயலலிதா ஏன் திடீர் என்று திறந்து வைத்தார் தெரியுமா? கருணாநிதி

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆலோசனை நடத்தினர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரி, புதுச்சேரி-காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களான ஆர்.வி.ஜானகிராமன், ஆர்.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 5.45 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை நடந்தது. கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, வேட்பாளர்களாக யார், யாரைத் தேர்வு செய்வது, எவ்வளவு இடம் கேட்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
கேள்வி: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள்?
பதில்: எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவு செய்ய குழு அமைத்துள்ளோம்.
கேள்வி: எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன?
பதில்: புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழுவையும், புதுச்சேரி-காரைக்கால் மாநில நிர்வாகிகள் அடங்கிய இன்னொரு குழுவையும் அமைத்துள்ளோம்.
கேள்வி: புதுச்சேரி தேர்தலில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப் போவதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளாரே?
பதில்: அது குறித்து புதுச்சேரி மாநில நிர்வாகிகள் குழு முடிவு செய்யும்.
கேள்வி: புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சமாதியை அதிமுக அரசு திடீர் என்று திறந்துள்ளதே?
பதில்: எம்.ஜி.ஆர். சமாதியின் முகப்பில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்டதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்துள்ளதால் அவசர அவசரமாக திறந்துள்ளனர் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications