சென்னையில் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரின் கையை ஒடித்த கல்லூரி மாணவர்கள்
சென்னை: சென்னையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூறிய கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கினர். இதில் அவரது கை ஒடிந்தது.
சென்னை அடையாறில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் சி51 எண் கொண்ட பேருந்து 10 கல்லூரி மாணவர்கள் உள்பட 50 பயணிகளுடன் இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. பேருந்து பாலவாக்கத்தை அடுத்து உள்ள வெட்டுவாங்கேணி அருகே சென்றபோது கண்டக்டர் செல்வராஜ்(40) கல்லூரி மாணவர்களிடம் பாஸை காண்பிக்குமாறு கூறினார். மேலும் பாஸ் இல்லாதவர்கள் டிக்கெட் எடுங்கள் என்றார்.
டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர், டிக்கெட் எடுக்கவில்லை என்றால் பேருந்தில் இருந்து இறங்கிவிடுங்கள் என்றார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவர்கள் கண்டக்டரை அடித்து நொறுக்கினர்.
இதைப் பார்த்த பிற பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். டிரைவர் தனது சீட்டில் இருந்து எழுந்து வந்தபோது மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மாணவர்கள் தாக்கியதில் செல்வராஜின் கை எலும்பு முறிந்தது. அதன் பிறகு அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
முன்னதாக கண்டக்டர் செல்வராஜ் இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 10 மாணவர்களை தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications