"எதியூரப்பா எம்.எல்.ஏ.க்கள்" மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் பாஜக

பாஜக மேலிட எச்சரிக்கையை மீறி எதியூரப்பாவின் தனிக் கட்சி தொடக்க விழாவில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா ஆகியோர் தலைமையில் பெல்காமில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாஜக மேலிடத்துக்கு மட்டுமே இருக்கிறது. மேலிடத்தின் ஆலோசனைப்படித்தான் நடப்போம். எங்களது முடிவை கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தியிருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சி கவிழும் என்ற கவலையெல்லாம் எங்களுக்கு இல்லை என்றார்.
இதேபோல் டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, அனந்தகுமார், ஜோஷி, அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்றே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் ஆட்சிக்கு ஆபத்து என்பதாலேயே பாஜக தயங்குகிறது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications