அன்று கூட்டத்தை ஆதரித்த நான் இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன்.அன்று ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.
2001-06 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. 500 மெகாவாட் உபரியாக இருந்தது. அதை பிற மாநிலங்களுக்கு விற்று அந்தப் பணத்தை அரசு கஜானாவில் சேர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், 2006- 11-ல் ஆட்சியில் இருந்த கருணாநிதியால், மின் வாரியத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு கருணாநிதியே முக்கிய காரணம்.
டெல்லியில் உபரியாக உள்ள 1200 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தாருங்கள் என ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால், மத்திய அமைச்சராக உள்ள கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தில்லியில் உபரியாக உள்ள மின்சாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு இந்திய அரசாங்கம் 5000 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது. ஆனால், உபரியாக உள்ள 1200 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலுக்கும் கருணாநிதிதான் காரணம் என்றார் அவர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications