நான் தவறு செய்துவிட்டேன்... என்னை தூக்கில் போடுங்கள்: கோர்ட்டில் கதறிய குற்றவாளி
டெல்லி: நான் கொடூரமான குற்றம் செய்துவிட்டேன். என்னை தூக்கில் போட்டு கொல்லுங்கள் என்று பாலியல் பலாதகார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவன் டெல்லி நீதிமன்றத்தில் கதறினான்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று தெரியவந்துள்ளது. இதில் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர்களில் பேருந்து ஓட்டுனரான ராம் சிங் 5 நாள் போலீஸ் காவலுக்கு நேற்று அனுப்பப்பட்டான். மீதமுள்ள முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மா ஆகிய மூன்று பேர் இன்று டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அதில் 2 பேர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பரை தான் இரும்பு கம்பியால் அடித்ததை ஒப்புக்கொண்டான். "நான் மிகக்கொடூரமான குற்றத்தை செய்துவிட்டேன்...நான் அந்த பையனை தாக்கினேன்.நான் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டியவன்" என்று கூறினார். இதனையடுத்து பஸ்வான் மற்றும் வினய் ஆகியோர்களை நான்கு நாள் போலீஸ் காவலுக்கும், முகேஷை 14 நாள் நீதிமன்ற காவலுக்கும் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியான பேருந்து ஓட்டுனரான ராம்சிங்கின் சகோதரரான முகேஷ்,குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் முன்பாக, அடையாள அணி வகுப்புக்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தப்பி ஓடிய இரண்டு பேர்களில் ஒருவர் பீகாரில் பிடிபட்டுள்ளதாகவும்,மற்றொருவர் தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications