தமிழகக் கடற்பரப்பில் 4-வது நாளாக சீற்றம்- மீன்பிடித் தொழில் பாதிப்பு
சென்னை: தமிழகக் கடற்பரப்பில் 4-வது நாளாக சீற்றம் நீடித்து வருவதால் மீன்பிடித் தொழில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக கடற்பரப்பில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்கச் சென்றவர்களும் பாதியில் கரை திரும்பினர்.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்தால் ஏற்படும் ராட்சத அலைகளால் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடலில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் விசைப்படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications