23ம் தேதி தேமுதிக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தேமுதிக சார்பில் சென்னையில் வரும் 23ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிறிஸ்துவ மார்க்கம் உலகம் தழுவிய ஒரு சிறந்த மதமாக திகழ்கிறது. மாற்றார்களிடமும் அன்பு செலுத்தவும், மற்றவர்களுக்கும் உதவி புரிந்திடவும் வலியுறுத்துகிறது.
இத்தகைய நன்மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளையொட்டி கொண்டாடுவதே கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். ஏழை எளிய மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை ஆண்டுதோறும் செய்து வருகிறோம்.
கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். விழாவில் நானும் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கவுள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், பேராயர் ராஜாசிங், டாக்டர் ஆர்.டி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டும் நமது இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications