டெல்லி கூட்டம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வெளிநடப்பு!

டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தை இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது 10-வது நிமிடத்தில் மணியடித்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததுடன் செய்தியாளர்களிடம் கொந்தளித்தார்.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் 4வது முறையாக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற நரேந்திர மோடியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்த போது 10 நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு நிறுத்துமாறு சொல்லப்பட்டது. இதனால் அவரும் வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்பு செய்த மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பல மாநிலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு 8% இலக்கு என்று கூறுகிறது. இது எப்படி சரியாகும்..
மத்திய அரசின் கருத்தைத்தான் மாநில முதல்வர்கள் கேட்க வேண்டும் என்பது சரியில்லை. மாநில முதல்வர்களின் கருத்தைத்தான் மத்திய அரசு கேட்க வேண்டும். மத்திய அரசின் கருத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதற்கு ஒரு கூட்டம் கூட்டப்பட வேண்டியது இல்லை. தற்போதைய நிலையில் மாநில முதல்வர்களின் கருத்துதான் முக்கியமானது என்றார் அவர்.
-
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications