விவசாயி மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: விவசாயியின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரரை அக்கம் பக்கத்து மக்கள் சேர்ந்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த பண்டப்பள்ளி கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். 39 வயதான இவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதே ஊரை சேர்ந்தவர் சந்திரன், விவசாயி. இவரது மனைவி ஷோபா. 31 வயதான ஷோபா, மஞ்சுநாதன் வீட்டுக்கு அருகில் கணவருடன் வசித்து வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு மாலையில் ஷோபா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மஞ்சுநாதன் திடீரென வீட்டுக்குள் புகுந்தார். ஷோபாவை மிரட்டி அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் பயந்து போன ஷோபா அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து மக்கள் ஓடி வந்தனர். அதற்குள மஞ்சுநாதன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ஷோபா போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மஞ்சுநாதனைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற மஞ்சுநாதனின் செயலால் கோபமடைந்த ஷோபாவின் கணவர் சந்திரன், அவரது உறவினர்கள் இருவர் ஆகியோர் மஞ்சுநாதன் வீட்டுக்குப் போனார்கள். அங்கிருந்த அவரது தாயாரை கடுமையாக திட்டினர். இதையடுத்து மஞ்சுநாதனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+