'தெலுங்கானா' : ஏமாற்றிய மத்திய அரசு- ஹைதராபாத்தில் தொடர் போராட்டம்!
ஹைதராபாத்; தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை உதயமாகிவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போன விரக்தியால் ஹைதரபாத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவே தெலுங்கானா தனி மாநிலம் குறித்து முடிவெடுக்க தாமதமாகும் என்று அறிவித்துவிட்டது. இதனால் நேற்று காலை முதல் ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.
தெலுங்கானா ஆதரவாளர்களின் போராட்ட களமாக இந்திரா பூங்கா மாறியுள்ளது. இன்று காலையும் இந்திரா பூங்காவில் கூடிய தெலுங்கானா போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
காங்கிரஸார் முற்றுகை
இந்நிலையில் இந்திரா பூங்காவில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் சென்றனர். ஆனால் அவர்களை போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டு கெரோ செய்தனர். முதலில் காங்கிரஸைவிட்டு வெளியேறுங்கள்! பின்னர் தெலுங்கானா போராட்டத்துக்கு வாருங்கள்!! என்று முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பும் பதற்றமும் உருவானது.
நாளை பந்த்
இதனிடையே தெலுங்கானா பகுதியில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள். மாணவர்களின் இந்த அழைப்பைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தெலுங்கானாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications