அஸ்ஸாமில் 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி
குவாஹாத்தி: அஸ்ஸாமில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எய்ட்ஸ் நோயாளி ஒருவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சில்சார் நகர் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 20ம் தேதி காலை 4 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். ஆனால் அவரைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அம்மாணவி வீட்டில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மயக்கம் தெளிந்த பிறகு அவர் போலீசாரிடம் கூறுகையில்,
கழிவறைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தியதாகவும். அதில் ஒருவர் தனது முகத்தில் ஸ்ப்ரே அடித்தவுடன் மயங்கிவிட்டேன். அதில் ஒருவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த ராஜிப் போர்லஸ்கார் என்றார்.
மாணவியை பரிசோதித்ததில் அவர் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜிபை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து ராஜிப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி என்றும், சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications